×

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க விமான நிலையத்தில் 2 பெல்ஜியம் நாய்கள்

சென்னை: விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் சக்தி     வாய்ந்த பெல்ஜியம் மெலினோஸ் என்ற இனத்தை சேர்ந்த 2 மோப்ப சக்தி உடைய நாய்கள் பணியை தொடங்கியுள்ளன. பெல்ஜியம் நாட்டின் புதிய வரவான இந்த நாய்க்குட்டிகள், பெங்களூருவில் 6 மாத கால பயிற்சியை முடித்துவிட்டு, சென்னை விமான நிலைய பணிக்கு வந்துள்ளன.பெல்ஜியம் மெலினோஸ் நாய்கள் சர்வதேச அளவில் அதிக மோப்ப சக்தி உடையவை. இதனால் சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் இந்த நாய் குட்டிகளை பணியில் சேர்க்க, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி பெல்ஜியம் நாட்டிலிருந்து 3 மாத நாய்க்குட்டிகள் இரண்டு, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சென்னை விமான நிலைய பாதுகாப்புபிரிவான மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு வந்தன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த நாய்க்குட்டிகளுக்கு பைரவா, வீரா என்று பெயரிட்டனர். அதன்பின்பு அந்த நாய்க்குட்டிகள் 6 மாத கால பயிற்சிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பெங்களுருவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில், 6 மாத கால பயிற்சியை இரு நாய்க்குட்டிகளும் பயிற்சி எடுத்தன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள், கர்நாடக மாநிலம் சென்று, பெல்ஜியம் நாய்க்குட்டிகள் எடுத்து வரும் பயிற்சிகளை ஆய்வு செய்தனர். இவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நாய்கள் மோப்பம் பிடிப்பதில், குறிப்பாக வெடிகுண்டு, வெடி மருந்துகளை கண்டறிவதில், சிறந்து விளங்குவதாக அப்போது தெரியவந்தது. பெல்ஜியம் மெல்லினோஸ் மோப்ப நாய்களான பைரவா, வீரா தங்களது பயிற்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு செய்தது. இதையடுத்து பெல்ஜியம் மெலினோஸ் நாய்க்குட்டிகளான பைரவா, வீரா தற்போது மீண்டும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு படையினரான மத்திய தொழில் பாதுகாப்புப்படை மோப்பநாய் பிரிவுக்கு வந்துள்ளது.

இன்றிலிருந்து இந்த நாய் குட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பணிகளை தொடங்குகின்றன. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் ஏற்கனவே 7 மோப்ப நாய்கள் உள்ளன. ஆனால் உலகப் புகழ்பெற்ற, பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் தற்போது, அதில் வந்து இணைந்து 9 மோப்ப நாய்களாக உள்ளன.  உலகில் பல்வேறு நாட்டு விமான நிலையங்களில், பெல்ஜியம் மெலினோஸ் மோப்ப நாய்கள், மோப்ப பணியில் உள்ளன. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக, சென்னை விமான நிலையத்தில் இந்த பெல்ஜியம் மொலினோஸ் மோப்ப நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை விமான நிலையம் தவிர, வேறு எந்த விமான நிலையங்களிலும் இந்த வகை மோப்ப நாய்கள் பணியில் இல்லை.
எனவே இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்திற்கு தான் இந்த சிறப்பு கிடைத்துள்ளது. இந்த பெல்ஜியம் மோப்ப நாய்களுக்கு தற்போது வயது 10 மாதங்கள். இன்னும் ஒரு வயது கூட நாய்க்கு நிறைவடையவில்லை.

இந்த இரு மூப்ப நாய்களுக்கும் நேற்று பணியில் இணைவதை ஒட்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இணைந்து, சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் முகாம் அலுவலகத்தில், இந்த நாய்களுக்கு வரவேற்பு விழா நடத்தினர். அதில் இந்த மோப்ப நாய்களுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டன. இந்த விழாவில் மத்திய தொழில் பார்க் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீராம், சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Tags : 2 Belgium dogs at airport to detect bombs
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100