12 கி.மீ. தூரம் காரில் இழுத்து செல்லப்பட்டு; விபத்தில் பலியான அஞ்சலி சிங் குடும்பத்துக்கு ஷாருக்கான் உதவி

மும்பை: டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கஞ்சவாலாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு மது போதையில்  திரும்பிக் கொண்டிருந்த 5 பேர் வந்த கார், திடீரென கட்டுப்பாடு இழந்து மொபட்டில் வந்து கொண்டிருந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது பெண் மீது மோதினர். இதில் அஞ்சலி சிங், காரின் அடிப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டார், அதை கவனிக்காத வாலிபர்கள், காரை மேலும் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதில், அஞ்சலி சிங்கின் உடல் பல பாகங்களாக கிழிந்து சாலையெங்கும் ரத்தமும் சதையுமாக சிதறியது. 12 கிலோ மீட்டர் தூரம் அஞ்சலியின் உடல் இழுத்து செல்லப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் ஷாருக்கான், உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்துக்கு நிதியுதவி செய்திருக்கிறார். அவர் கொடுத்த தொகை வெளியிடப்படவில்லை. ‘அஞ்சலி சிங்கின் வருமானத்தில்தான் மொத்த குடும்பமும் வாழ்ந்து வந்தது. தற்போது அந்த இடத்தில் ஷாருக்கான் இருந்து உதவி செய்திருக்கிறார். ஷாருக்கான் கொடுத்த நிதி மிகவும் உதவியாக இருக்கிறது’  என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஷாருக்கான் தனது மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியை வழங்கியிருக்கிறார்.

Related Stories: