மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளை நிர்வாகமே மூட வேண்டும்: அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

சென்னை: சேர்க்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளை, கல்லூரி நிர்வாகத்தினர் தாங்களாகவே மூடிவிட்டால் நல்லது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பொறியியல், சுற்றுச்சூழல், புதிய தொழில்நுட்பம் சார்ந்த புத்தகக் கண்காட்சியை பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர். நிருபர்களுக்கு துணை வேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டி:அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பம் துறை சார்ந்த புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் 3 நாட்கள் கண்காட்சி நடக்கிறது. 45 பதிப்பக விற்பனையாளர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 150 கல்லூரிகளில் சேர்க்கை குறைவாக உள்ளது. போதிய வசதிகள் இல்லை. சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளை கல்லூரி நிர்வாகத்தினர் தாங்களாகவே மூடிவிட்டால் அவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லது. சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளும், தரமற்றிருக்கும் பொறியியல் கல்லூரிகளும், நிரந்தரமாக மூட நடப்பாண்டிலும் பரிந்துரை செய்யப்படும்.

Related Stories: