மாநில அரசு தயாரிப்பதை கவர்னர் படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் பாஜ சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி: கவர்னரின் உரை என்பது, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மாநில அரசாங்கம் தயாரித்து கொடுப்பதை படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், கவர்னரை தங்கள் சித்தாந்தத்தை புகழ்பாட கூடிய ஒருவராக ஆளக்கூடிய  அரசாங்கம் நினைக்க முடியாது. அரசின் திட்டங்களையோ, செயல்களையோ தான் கவர்னர் உரையில் குறிப்பிடுவார். இதுதான் பாரம்பரியமாக இருக்கக்கூடிய மரபு. ஆனால்  தங்கள் சித்தாந்தங்களுக்கு எதிராக அவர் வெளியில் பேசுகிறார் என்று கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர்கள் இன்று, சட்டப்பேரவையை ஒரு களமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இம்மாதிரியான ஆளுங்கட்சியான போக்கு என்பது மாநில நலனுக்கு உகந்தது இல்லை. இந்த விஷயங்களை பொறுத்தவரை அவர்களின் உறவு பேணாத நிலையை காட்டுகிறது என்றார்.

Related Stories: