புத்தாண்டுக்கு பின் நடந்த தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

மாஸ்கோ: புத்தாண்டுக்கு பின் நடந்த தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்ய ராணுவ மோதலுக்கு மத்தியில் ரஷ்ய அமைச்சக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தின.

அதற்காக உக்ரைனின் கிராம்டோர்ஸ்க்கின் மீது கடுமையான பதிலடி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 600 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். 1,300க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் வெவ்வெறு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் உக்ரைன் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ‘புத்தாண்டு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, சுமார் 400 ரஷ்ய வீரர்களை உக்ரைன் ராணுவம் கொன்றது’ என்று கூறியது. ஆனால் தங்களது தரப்பில் 89 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Stories: