×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்..!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் முழு உரையையும் தமிழில் ஆளுநர் பேசி வருகிறார். ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர், பேரவையிலிருந்து வெளியேற வேண்டும் என முழக்கம் எழுப்பினர். ஆளுநரை பேச விடாமல், உறுப்பினர்கள் தெடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை தவிர பிற கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநரை கண்டித்து காங்., கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.


Tags : Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi , Tamil Nadu Assembly started in a tense political situation: slogans protesting Governor RN Ravi's speech..!
× RELATED சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி...