×

இலங்கைக்கு 75 பஸ் வழங்கியது இந்தியா

கொழும்பு: பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கையில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா 75 பஸ்களை அந்நாட்டிற்கு வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, இலங்கையில் பொருளாதாரம் முடங்கியதால், கடந்த ஆண்டு மே மாதம் அந்நாடு திவாலானதாக அறிவித்தது. நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில் இந்தியா , இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஓராண்டில் ரூ.32,000 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இந்நிலையில், பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா 75 பஸ்களை இலங்கைக்கு தற்போது வழங்கி உள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் விடுத்த அறிக்கையில், ‘தற்போது 75 பஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் உதவித்திட்டம் மூலம் மொத்தம் 500 பஸ்கள் வழங்கப்பட உள்ளன’ என்றார். முன்னதாக கடந்த டிசம்பரில் இலங்கை போலீசாருக்காக 125 எஸ்யுவி ரோந்து கார்களை இந்தியா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Tags : India ,Sri Lanka , India provided 75 buses to Sri Lanka
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...