காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுராந்தகம் அருகே நேற்று மாலை மாமண்டூரில் நடந்தது. இதில், மாவட்ட அவை தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, டி.வி.கோகுலக்கண்ணன், மலர்விழிக்குமார், மாவட்ட பொருளாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இடம் வழங்கிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக கலைஞர் அறிவித்த நாள் முதல் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று, தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் மகளிருக்கு கோல போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து காஞ்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விழா சிறப்பாக கொண்டாட வேண்டும்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் திமுகவினர் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டுமென  வேண்டும் என உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில்காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன், திமுக நிர்வாகிகள் நாகன், எம்.எஸ்.சுகுமார், சிகாமணி, சசிகுமார், எழிலரசி, சுந்தரமூர்த்தி, வெளிக்காடு உசேன், ராஜேந்திரன், தமிழ்ச்செல்வன், கே.குமார், ஜி.ஞானசேகர், டி.குமார், பி.சேகர், குமணன், பி.எம்.குமார்,பி.பாபு, கே.கண்ணன், ஜி.தம்பு பி.எச்.சத்யசாய், பொன்.சிவக்குமார், கே.எஸ்.ராமச்சந்திரன், வி.ஏழுமலை ஏ.சிற்றரசு, இ.சரவணன், எம்.எஸ். பாபு, என்.எஸ்.பாரிவள்ளல், என்.பாண்டியன், ஏ.சுந்தரமூர்த்தி, வி.டி.ஆர்.வி. எழிலரசன், அறங்காவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: