×

மக்கள் ஐ.டி. திட்டம் செயல்படுத்தும் முன் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்க வேண்டும்: அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: மக்கள் ஐ.டி. திட்டம் செயல்படுத்தும் முன். வெளி மாநில தொழிலாளர்களை பற்றிய முழுமையான கணக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கும், மக்கள் ஐ.டி. என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்க போவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐ.டி. திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்.

அதே சமயம் தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐ.டி. போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

Tags : Vijayakanth ,Govt , People's IT Survey of out-of-state workers before implementation of scheme: Vijayakanth's request to Govt
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...