மே மாதம் ஸ்ரீநகரில் ஜி20 விளக்க மாநாடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் வரும் மே மாதம் ஜி20 விளக்க மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இந்தாண்டிற்கான ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி-20 கூட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், ஜி-20 அமைப்பு குறித்து விளக்க மாநாட்டை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் 5ம் தேதி கூட்டியது. இந்நிலையில், ஜி-20 தொடர்பான விளக்க மாநாட்டை வரும் மே மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங் குந்தபாராவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறிய போது, ``ஜி20 மாநாடு நடத்தப்பட இருப்பதால் ஸ்ரீநகர் அதற்கு தயாராகி வருகிறது. ஜி20க்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்று இருப்பதால், அது தொடர்பான சில நிகழ்ச்சிகள் ஸ்ரீநகரில் வரும் மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதிகள் இன்னும் முடிவாகவில்லை,’’ என்று கூறினார்.

Related Stories: