×

பாக். எல்லையில் முதல் முறையாக ரேடார் பொருத்திய டிரோன்கள்: பிஎஸ்எப் நடவடிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக தோண்டப்பட்ட சுரங்கங்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க முதல் முறையாக ரேடார் பொருத்திய டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்த உள்ளனர். பாகிஸ்தானில் இருந்து சுரங்கங்கள் தோண்டி இந்திய எல்லைக்குள் அத்துமீறி எல்லை தாண்டிய தீவிரவாதம், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சுரங்கங்களின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் 192 கி.மீ. தூரம் கொண்ட பூமிக்கடியில் இருந்த 5 சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டன.  

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பூமிக்கடியில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையினர் முதல் முறையாக ரேடார் பொருத்திய டிரோன்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இவை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும். பூமிக்கடியில் சுரங்கங்கள் இருப்பதை இந்த டிரோன்கள் கண்டுபிடிக்கும்.


Tags : BSF , Pak. Radar-equipped drones for first time on border: BSF in action
× RELATED இந்திய – வங்கதேச எல்லையில்...