சிறுநீர் கழித்த விவகாரம் ஏர்இந்தியா முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம்: டாடா குழும தலைவர் வருத்தம்

மும்பை: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் வருத்தம் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சங்கர் மிஷ்ரா, பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டார்.

இந்த விவகாரம் 3 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்து அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,ஏர் இந்தியாவை நிர்வகித்து வரும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், `` இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் சற்று முன்னரே விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில், அதனை எதிர்கொள்ள ஏர்இந்தியா நிறுவனம் தவறிவிட்டது,’’ என்று வருத்தம் தெரிவித்தார்.

Related Stories: