×

கடந்த ஆண்டு கார் விற்பனையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடம்: 2.6கோடி கார்களை விற்று சீனா முதலிடம்

டெல்லி: 2022 ஆண்டில் ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி கார்கள் விற்பனையில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

2021-ம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதே சமயம் அமெரிக்கா 1.5 கோடி கார்களை விற்பனை செய்து 2-வது இடத்திலும், 44 லட்சம் கார்களை விற்பனை செய்து ஜப்பான் 3-வது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் கடந்த 2022-ம் ஆண்டு கார் விற்பனை 42 லட்சமாக குறைந்தது. அதே சமயம் இந்தியாவில் 42.5 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. அதன் மூலம் 2022 ஆண்டில், ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாகவும், மின்சார கார்களின் விற்பனை ஒப்பிட்டளவில் மிக குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Japan ,China , Car sales, India 3rd, China 1st
× RELATED ஓட்டுப்போட ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் வாக்காளர்