ஆஸி.-தென்ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட் டிரா

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்ரிக்கா 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட்டிலும் ஆஸி. வெற்றிபெற்று 2-0 என தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும்கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் நாட்அவுட்டாக 195, ஸ்டீவன் ஸ்மித் 104ரன் எடுத்தனர்.

2ம் நாள் முடிவில்4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் எடுத்திருந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் 4வது நாளான நேற்று அதே ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்க அணியில் கேப்டன் டீன் எல்கர் 15, சாரெல் எர்வீ 18, ஹென்ரிச் க்ளாசென் 2 , தெம்பா பவுமா 35 , காயா ஜோண்டா 39ரன்னில் வெளியேறினர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில்தென்ஆப்ரிக்கா  6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்திருந்த நிலையில்கடைசி நாளான இன்று மார்கோ ஜான்சன் 11ரன்னில் வெளியேற  கேசவ் மகராஜ்-சைமன் ஹார்மர் 8வது விக்கெட்டிற்கு 85 ரன் சேர்த்தனர்.

உணவுஇடைவேளையின் போது தெ.ஆ.7விக்கெட்டிற்கு 244ரன் சேர்த்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மகராஜ்   53ரன்னில்  அவுட் ஆனார்.சைமன் ஹார்மர்  47ரன்னில் வெளியேற 108 ஓவரில் 255ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. ஆஸி. பவுலிங்கில் ஹேசில்வுட் 4,  கம்மினஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.  பின்னர் 220ரன் பின்தங்கிய 2வது இன்னிங்சிசை தென்ஆப்ரிக்கா ஆடியது. கேப்டன் எல்கர் 10 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார்.18 ஓவரில் தென்ஆப்ரிக்காஒருவிக்கெட் இழப்பிற்கு 47 ரன் எடுத்திருந்தது. இன்னும் 29 ஓவர்களே  இருந்ததால் போட்டி டிராவை நோக்கிச்சென்றது.

Related Stories: