×

லாட்டரி விற்ற பாஜ பிரமுகர் கைது

விருதுநகர்: விருதுநகரில் உள்ள கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர், பாஜ சிறுபான்மைப் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். இவர், தமிழக அரசு தடை செய்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து, விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், விருதுநகர் பஜார் போலீசார், அவரது வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தியதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, கேரள ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்தது உறுதியானது‌.

இதை தொடர்ந்து பிரான்சிசை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Baja Mukherr , Lottery, BJP leader, arrested
× RELATED பெண்ணிடம் ஆபாச சைகை பாஜ பிரமுகர் கைது