பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை ஜனவரி 10ம் தேதி தொடங்கிவைக்கிறார் அமைச்சர் சேகர் பாபு

சென்னை: 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு இரண்டு இணை புத்தாடை / சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுத்திடவும், மேலும் அர்ச்சகர்/ பட்டாச்சாரியர் / பூசாரி ஆகிய பணியிடங்களில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு பருத்தி வேட்டியும், பெண் பணியாளர்களுக்கு புடவையும் மற்றும் இதர திருக்கோயில் பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடை / புத்தாடை வழங்கும் நிகழ்வானது 10.01.2023 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் சென்னை, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் துவக்கி வைக்கப்படவுள்ளது. எனவே திருக்கோயில் பணியாளர்களுக்கு 10.01.2023 அன்று சீருடைகள் மற்றும் புத்தாடைகளை வழங்க துரித நடவடிக்கை எடுத்திட சார்நிலை அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், வழங்கிய விவரத்தை அன்றைய தினம் மாலைக்குள் மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: