சனாதனம் பற்றி கவர்னர் பேசுவதா? டி.ஆர்.பாலு எம்பி கேள்வி

சென்னை: அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், அம்பத்தூர் அருகே பாடியில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், ‘‘கட்சியில் தொண்டர்களுக்கு இடையே சில பிரச்னைகள் இருந்தால், விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்று பேராசிரியர் அடிக்கடி சொல்வார். அமைச்சர் சேகர்பாபுவிடம் எதை சொன்னாலும் ‘நோ’ சொல்லவே மாட்டார், முடித்து காட்டுவார். அவர், ஆலய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

போலீஸ் தொழிலில் இருந்த ஆள் தமிழகத்துக்கு வந்துள்ளார். அவர், இங்கு நேர்மையாகவும் தூய்மையாகவும் இல்லாத ஒரு நபர். அவர் இப்போது இங்கு ஆளுநராக உள்ளார். ஆளுநர் ரவி சொல்கிறார் சனாதனம்தான் பெரியது என்று, புதிய கல்வி கொள்கை , நீட் தேவை என சொல்ல கவர்னர் யார்? பாஜ ஆட்சி இனி தொடராது. காங்கிரஸ் மிக பெரிய கட்சி. கண்டிப்பாக மீண்டும் உயரத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும், நாங்கள் மற்றவற்றை பார்த்து கொள்வோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: