ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது: காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு; மாலையில் வாக்கு எண்ணிக்கை

சென்னை:  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள்  தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், முன்னாள் செயலாளர் எம்.வேல்முருகன், சி.ராஜசேகரன், சத்தியபால், ஆ.மோகன்தாஸ், ஆர்.பாலசுப்பிரமணியன், டாக்டர் பத்மா,  மகாவீர் சிவாஜி ஆகிய 9 பேர் போட்டியிடுகிறார்கள்.

துணை தலைவர் பதவிக்கு அப்துல்ரஹ்மான், அறிவழகன், கே.பாரதி, கே.கோபால், முரளி,  நித்தியானந்தன், ராமசிவசங்கர், ஜெ.தாமஸ் ஆகிய 8 பேர் போட்டி இடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு ஆர்.கிருஷ்ணகுமார், எஸ்.காமராஜ், பி.ஜி.குமரகுரு, ஆர்.மோகன்தாஸ், ஆர்.பிரபு, ராஜா மதிவாணன், கே.சசிகுமார், டி.எஸ்.சசிகுமார், வி.சிவசண்முகம், எம்.உதயகுமார் ஆகிய 10 பேர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு ஜி.ராஜேஷ், வி.ஆனந்த், தாரா உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகிறார்கள்.  நூலகர் பதவிக்கு  என்.விஜயராஜ், வி.எம்.ரகு, எஸ்.என்.சுப்பிரமணி, இளையராஜா கந்தசாமி, கஜலட்சுமி  ராஜேந்திரன், ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள். இதேபோல் 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு  வி.இ.அனிஸ்குமார், சாம் ஆர்தர் ஜெபக்குமார், எம்.தேவபிரபு உள்ளிட்ட 44 பேர் போட்டியிடுகிறார்கள். ஐந்து இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 33 பேர் வேட்புமனு  தாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குபதிவு மாலை 5.30க்கு முடிவடையும். உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

Related Stories: