×

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்: தலைமை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வந்த அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் கலந்து கொண்ட இரண்டுநாள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கலந்து கொண்டார்.

இந்நிலையில் இந்த மாநாடு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மாநாட்டில் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மேலும் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : PM ,Modi ,chief secretaries , Improve people's lives: PM Modi appeals to chief secretaries
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...