×

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: பைனலில் ஜோகோவிச்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடக்கும் அடிலெய்டு சர்வதேச  டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். அரையிறுதியில் முன்னாள் நம்பர் 1 வீரர்களான ஜோகோவிச் (35 வயது, 5வது ரேங்க்), ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் (26 வயது, 7வது ரேங்க்) மோதினர். நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இருவரும் வெற்றிக்காக கடுமையாகப் போராடினர். முதல் செட்டை  6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் மெத்வதேவ் கடும் நெருக்கடி கொடுத்தார். எனினும், பதற்றமின்றி விளையாடிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 30 நிமிடட்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில்  அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா (22 வயது, 33வது ரேங்க்), ஜப்பான் வீர்    யோஷிஹிட்டோ நிஷியோடாவுக்கு (27 வயது, 36வது ரேங்க்) எதிராக முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியதுடன் 2வது செட்டிலும் 1-0 என முன்னிலை வகித்த  நிலையில் நிஷியோடா காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து, இன்று நடைபெறும் பைனலில்  செபாஸ்டியன் - ஜோகோவிச்  மோதுகின்றனர்.

Tags : Adelaide International Tennis ,Djokovic , Adelaide International Tennis: Djokovic in final
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!