×

திறப்பு விழா தேதி அறிவிப்பு அயோத்தி ராமர் கோயில் பூசாரியா அமித்ஷா?: கார்கே காட்டமான கேள்வி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேதி அறிவித்த அமித்ஷா கோயில் பூசாரியா என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
அயோத்தி  ராமர் கோயிலின் கட்டுமான பணி முடிந்து 2024 ஜனவரி 1ம் தேதி கோயில்  திறக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறினார். இதுதொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர்  சம்பத் ராய்  அளித்த பேட்டியில், ‘அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர்  சிலை நிறுவப்படும். தொடர்ந்து கோயில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோயில்  திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கும்’ என்றார்.

இந்நிலையில்  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே  அளித்த  பேட்டியில், ‘ எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னர் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என்று அமித்ஷா கூறுகிறார். அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட நீங்கள் யார்? நீங்கள் ராமர் கோயிலின் பூசாரியா அல்லது கோயில் நிர்வாகியா?. அவர்கள் அதைச் சொல்லட்டும். நீங்கள் ஒரு அரசியல்வாதி. நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதும், மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை கொடுப்பதும் உங்கள் வேலை.  நாட்டைப்  பாதுகாப்பது தான் உங்களுடைய பணி’ என்று காட்டமாக கூறினார்.


Tags : Ayodhya Ram ,priest ,Amit Shah , Ayodhya Ram temple priest Amit Shah to announce opening ceremony date?
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்