×

கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக. தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 9ம் தேதி முதல் 11ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு, கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Tags : Meteorological Research Centre , Coastal districts likely to receive rain today due to easterly wind speed variation: Meteorological Department Information
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9...