தனியாரின் லாபத்திற்காக நிலத்தை கையகப்படுத்த முயற்சி: என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி நடைபயணம்

கடலூர்: அன்னூரில் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்து போராட்டம் நடத்தும்  எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோர் என்.எல். சி நிர்வாகத்தை கண்டித்து போரட்டம் நடத்தாதது ஏன், என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்ட நெய்வேலி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்தவுள்ள என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நடை பயணம் தொடங்கியுள்ளார்.

வானதிராய புரத்தில் நடைபயணம் தொடங்கும் முன்பு பேசிய அன்புமணி என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை கையகபடுத்தினால் கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார். 1981ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் இந்த நிலங்களில் இருந்து அடுத்த 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்க முடியும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை தவிர்த்து விட்டு 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகபடுத்த என்.எல்.சி நிர்வாகம் முயற்சித்து வருவது எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் தனியாரின் லாபத்திற்காக நிலம் கையகபடுத்த படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 2025ம் ஆண்டுக்குள் என்.எல். சி  நிர்வாகத்தை தனியார் மயமாக்கப்படும் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நடை பயணமாக செல்லும் அன்புமணி ராமதாஸ் நாளை கரிவெட்டி கிராமத்தில் நிறைவு செய்கிறார். 

Related Stories: