×

நீட் தேவை என சொல்ல கவர்னர் யார்? டி.ஆர்.பாலு எம்பி ஆவேச பேச்சு

அம்பத்தூர்: அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், அம்பத்தூர் அருகே பாடியில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் டிஎஸ்பி.ராஜகோபால் தலைமை தாங்கினார்.  டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், எங்கள் அனைவரது ரத்தத்திலும் உயிரணுக்களிலும் பேராசிரியர் அன்பழகன் கலந்திருக்கிறார். கட்சியில் தொண்டர்களுக்கு இடையே சில பிரச்னைகள் இருந்தால், விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்று பேராசிரியர் அடிக்கடி சொல்வார். அமைச்சர் சேகர்பாபுவிடம் எதை சொன்னாலும் ‘நோ’ சொல்லவே மாட்டார், முடித்து காட்டுவார்.

அவர், ஆலய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். போலீஸ் தொழிலில் இருக்கும் ஒரு ஆள், நேர்மையாகவும் தூய்மையாகவும் இல்லாத ஒரு நபர் இங்கு ஆளுநராக உள்ளார். சனாதனம்தான் பெரிது, புதிய கல்வி கொள்கை , நீட் தேவை என சொல்ல கவர்னர் யார்? பாஜ ஆட்சி இனி தொடராது. காங்கிரஸ் மிக பெரிய கட்சி. கண்டிப்பாக மீண்டும் உயரத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும், நாங்கள் மற்றவற்றை பார்த்து கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், 7வது மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, கிழக்கு பகுதி செயலாளர் எம்டிஆர்.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dr. ,Balu , Who is the governor to say that NEET is required? Dr. Balu MP's passionate speech
× RELATED திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன்,...