இன்னிக்கு ஒரு புடி..!: மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத கோயில் திருவிழா..100 ஆடுகள், 2000 கிலோ அரிசி கொண்டு அசைவ விருந்து..!!

மதுரை: திருமங்கலத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. மதுரை கிராமம் அனுப்பப்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த கருப்பையா முத்தையா கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் அசைவ திருவிழா நடைபெறும். ஆண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்வர் கரடிக்கல், செக்கானூரணி, சாத்தான்குடி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் 100 ஆடுகள், 2000 கிலோ அரிசி கொண்டு அசைவ விருந்து வைக்கப்பட்டது. விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி மக்கள் வாழவும் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. விருந்தில் இலைகளை சாப்பிட்ட இடத்திலேயே ஆண்கள் விட்டுவிட்டுச்  செல்வர். அந்த இலைகள் மண்ணோடு மண்ணாகி மயமானால் நன்மை நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். 

Related Stories: