×

டென்னிசில் இருந்து சானியா மிர்சா ஓய்வு

ஐதராபாத்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா. 36 வயதான இவர், மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சானியாவுக்கு இஷான் மிர்சா மாலிக்  என்ற 4வயது மகன் உள்ளான். இதனிடையே கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்துவாழ்ந்து வரும்நிலையில், சோயிப்மாலிக், பாகிஸ்தானில் விவாகரத்து பெற்றுவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதுபற்றி சானியா வாய்திறக்கவில்லை.

இதனிடையே மெல்போர்னில் வரும் 15ம்தேதி தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம்  தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா இணைந்து சானியா களம் இறங்க உள்ளார். முழங்கை காயம் காரணமாக கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனை தவறவிட்ட பின்னர் அவர் பங்கேற்க உள்ள கடைசி  கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும். இருப்பினும், ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா மிர்சா பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் டபிள்யூடிஏ 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன்  டென்னிஸில் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக  சானியா அறிவித்துள்ளார்.


Tags : Sania Mirza , Sania Mirza retires from tennis
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...