பந்தலூரில் கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு-நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பந்தலூர் : பந்தலூர் பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜார் மற்றும் பஸ்நிலையம், மற்றும கடைகளுக்கு முன்பாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் அரசு அலுவலக வளாகங்களின் முன்பாக  தினந்தோறும் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல்,விபத்து அபாயம் நீடிக்கிறது.

கால்நடைகளால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.பந்தலூர் பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதித்து கால்நடைகளை முறையாக பஜார் பகுதியில் சுற்றித் திரியாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு

ள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: