×

ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி ரேஷன் கடைக்கு பூமி பூஜை-பணிகளை கிருஷ்ணமுரளி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

செங்கோட்டை : செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம், 12வது வார்டு கேசி ரோடு பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.  கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.

நகராட்சி ஆணையாளர் (பொ)ஜெயப்பிரியா, நகர்மன்ற  துணை தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் பிரிவு மேற்பார்வையாளர் காந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், அவைத்தலைவர் மூர்த்தி, நகர செயலாளர் கணேசன், நகர அவைத்தலைவர் தங்கவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். 


Tags : Krishnamurali ,MLA ,Bhoomi Pooja ,Anganwadi ration , Sengottai : Sengottai Concert Compound at Govt Middle School Campus under Assembly Member Constituency Development Fund
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்