×

சசிகலாவின் உறவினரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை: பாஸ்கர் கைதாக வாய்ப்பு

சென்னை: செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாக இரவாரசியின் மகன் விவேக்கின் மாமனாரான மாஸ்கரிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அண்ணாநகரில் வசித்து வரும் சசிகலாவின் உறவினரான பாஸ்கர் நடத்தி வந்த அரைக்கலன்கள் கடையில் கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை தியாகராய நகரில் உள்ள திரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து நள்ளிரவில் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் பாஸ்கர் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்கரன் கைது செய்யப்பட்டால் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது. செம்மரக்கடத்தல் வழக்கில் கடந்த ஆண்டு ஆந்திர போலீசாரால் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமீனில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags : Sasigala ,Revenue Intelligence Officers ,Basker , Revenue probes Sasikala's relative: Bhaskar likely to be arrested
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...