திமுக இலக்கிய அணியில் மாவட்ட வாரியாக மாநில பொறுப்பாளர்கள் நியமனம்: வி.பி.கலைராஜன் அறிவிப்பு

சென்னை: திமுக இலக்கிய அணியில் மாவட்ட வாரியாக மாநில பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக இலக்கிய அணிச்செயலாளர் வி.பி.கலைராஜன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திமுக இலக்கிய அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் நியமனம் செய்திட அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்டக்கழக செயலாளர்களை தொடர்புக்கொண்டு, அமைப்பு நியமிப்பு செய்திட அணி தலைவர், துணைத் தலைவர், புரவலர், இணைச்செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், பொருளாளர் ஆகிய மாநில இலக்கிய அணி நிர்வாகிகளைக் கொண்ட ‘‘இலக்கிய அணி பொறுப்பாளர்கள்’’ நியமிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட கழகச்செயலாளர்களை நேரிலோ அல்லது அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அணி நிர்வாகிகள் பட்டியலை பெற்று, தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து இறுதிப்பட்டியலை கழகத் தலைவரின் பார்வைக்கு கொண்டு சென்று, அவர் ஒப்புதலை பெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

அதன்படி, சென்னை வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாநில இலக்கிய அணி நிர்வாகிகளாக தலைவராக இந்திரகுமாரி, இணைச்செயலாளராக ச.நம்பிராஜன், பொருளாளராக நா.சந்திரபாபு நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு மாநில இலக்கிய அணியின் துணைச்செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரன் நியமனம் செய்யப்படுகிறார்.

Related Stories: