குஜராத் தடுப்பணைக்கு மோடியின் தாயார் பெயர்

ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட்டில் கட்டப்படும் புதிய தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் மறைந்த தாயார் ஹீராபென்   பெயர் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட்  கலவாட் சாலையில் உள்ள வகுதாத் கிராமத்திற்கு அருகே ஓடும் நயாரி ஆற்றின் கீழ்ப்பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்நிலையில் இந்த புதிய தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் மறைந்த தயார் ஹீராபென் பெயர் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: