×

எலான் மஸ்குக்கு அடுத்த தலைவலி ஹேக் செய்யப்பட்டது டிவிட்டர்: 20 கோடி பேர் இமெயில் முகவரிகள் திருட்டு

லண்டன்: டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 20 கோடி பேரின் இமெயில் முகவரியை ஹேக்கர்கள் திருடி உள்ளனர். டிவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை எழுந்து வருகிறது. தற்போது டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலிய நாட்டின் சைபர் பாதுகாப்பு  நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.  இதன் மூலம் 20 கோடிக்கும் அதிகமான டிவிட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ஹேக்கர்கள் திருடி அவற்றை ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர்.

ஹேக்கிங் தொடர்பான முதல் தகவல் கடந்த மாதம் டிச. 24 அன்று சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனாலும் இதுபற்றி இப்போது வரை டிவிட்டர் தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. வழக்கமாக கருத்து தெரிவிக்கும் எலான் மஸ்கும் இதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. இணைய தளத்தில் வெளியான தகவல்கள் உண்மையானதா, போலியா என்பதை பற்றி ஆராய்ச்சி நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹேக்கிங் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு 2021ம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : Elon Musk ,Twitter , Elon Musk's Twitter Hacked, Email Addresses Stolen
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...