×

79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் காரைக்குடி மாணவர் சாதனை

சென்னை: காரைக்குடியை சேர்ந்த பிரனேஷ், செஸ் போட்டியில் இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர், தமிழ்நாட்டில் 28வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 1 மாணவர் பிரனேஷ் (16)மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் 600க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியின் யு-16 பிரிவில் தங்கம், பிரான்சில் நடந்த கிராண்ட் மாஸ்டர் போட்டியில் முதல் இடம், இலங்கை காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்றுள்ளார்.

தற்போது சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் போட்டியில் (டிச. 27 - ஜன. 5) 9க்கு 8 புள்ளி எடுத்து இந்திய அளவில் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டமும், தமிழ்நாடு அளவில் 28வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். 2,500 பாயின்ட் எடுத்தால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறலாம் என்ற நிலையில் பிரனேஷ் 2,504 பாயின்ட் பெற்றுள்ளார்.

அன்றே அடையாளம் காட்டிய ‘தினகரன்’
சிறு வயதிலேயே செஸ் போட்டியில் திறமையுடன் செயல்பட்டு வந்த பிரனேஷ் குறித்து, கடந்த 2012ல் தினகரன் நாளிதழ் மாணவர் களத்தில் சிறப்பு செய்தி வெளியானது. அதில் செஸ் போட்டியில் உலக சாம்பியன் வெல்வதே லட்சியம் என்று மாணவர் பிரனேஷ் தெரிவித்திருந்தார். 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் பிரனேஷ் கிராண்ட் மாஸ்டராகி சாதித்துள்ளார்.

Tags : 79th Grand Master, student of Karaikudi, achievement
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...