×

சேலம் கடைவீதியில் பெரிய நெல்லிக்காய் விற்பனைக்கு குவிப்பு

சேலம்: சேலம் கடைவீதியில் பெரிய நெல்லிக்காய் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இவை கிலோரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நெல்லிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவை உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் விளைச்சல் செய்யப்பட்ட பெரிய நெல்லிக்காய்  மாநிலத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, சேலம் கடைவீதிக்கு வரத்து அதிகரித்து பெரிய நெல்லிக்காய் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவை கிலோரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தென் மாவட்டங்களில் பெரிய நெல்லிக்காய் அதிகளவில்  சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, சேலம் கடைவீதி, மார்க்கெட் பகுதிக்கு  வரத்து அதிகரித்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நெல்லிக்காய் தரத்திற்கு ஏற்ப ரூ.70 முதல் விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்.


Tags : Salem , Huge gooseberries piled up for sale in a Salem market
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!