×

கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது; ஐகோர்ட்

சென்னை: கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். கோயில் நிலத்தை மூன்றாவது நபருக்கு மனுதாரர் கிரயம் செய்துள்ளார் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை முடக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை கூறியுள்ளது. கோயில்களை பாதுகாப்பாக கூறி வழக்கு தொடரும் நிலையில் கோயில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். கோயில் நிலத்தை விற்பனை செய்த எனது சகோதரரை நிலத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தினேன் என்று மனுதாரர் கூறியுள்ளார்.  வழக்கு விசாரணையை நீதிபதிகள் மாகாதேவன், ஆதிகேசவலு அமர்வு ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

தெய்வபக்தி இல்லாத எவரையும் கோயில் அரங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க உடைத்து என்று உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது. அறங்காவலர் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் ஜனவரி 25-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.


Tags : iCourt , Temple Property, Action, Officer, Right, Inalienable, iCourt
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...