உடற்பயிற்சி மேற்கொண்ட போது மாரடைப்பு: ஓட்டல் உரிமையாளர் ஜிம்மில் மரணம்

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பிரதீப் ரகுவன்ஷி என்பவர், இந்தூரின் லசுடியா பகுதியில் உள்ள கோல்டன் ஜிம்மிற்கு தினமும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று வருவது வழக்கம். அதன்படி சமீபத்தில் அங்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார். அருகிலுள்ள பண்டாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் ஜிம்மில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் நண்பரான பிரதீப் ரகுவன்ஷி, ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் மயக்கமடைந்த அவர் கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். இருந்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: