ஆவடி காவல் ஆணையாளர் தலைமையில் காவலர்களுக்கான கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது..!

ஆவடி: ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் எண்ணற்ற சமுதாய கண்ணோட்டத்தில் காவலர்களின் நலன் கருதி இன்று 06/01/2023- ம் தேதி ஆவடி காவல் ஆளினர்கள் மற்றும் காவல் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம் ஆவடி காவல் ஆணையரகத்தில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

சுமார் 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் இக்கண் பரிசோதனையில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பரிசோதனையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் அழுத்தம், கண் பூளு விஷன், கண் பொறை, ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.   

Dr.சுரிஜா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை குழு உள்ளிட்டோர் நல்ல முறையில் பரிசோதித்து தக்க ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ப. விஜயகுமாரி கூடுதல் காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம், ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: