மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரே ஒரு கட்டடம் மட்டுமே கட்டப்பட்டு அதுவும் தற்போது பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதியில் கூடுதலாக 164 கோடிகள் சேர்க்கப்பட்டு, 450 படுக்கைகள், தொற்று நோய் தடுப்புக்காக சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளுடன் மொத்தம் கூடுதலாக 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மருத்துவ படிப்புக்கான இடங்கள் 100லிருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவும் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.  உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர விழாவை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கி நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கவும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லுரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லுரி நிறுவக் கோரிக்கை அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழ்நாட்டிற்கு கொரோன தடுப்பூசி கூடுதலாக வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.  மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோன தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கக் கோரினோம் என்றும் அவர் கூறியுள்ளார். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகள் மீது தமிழ்நாடு அரசின் ஆட்சேபணையை தெரிவித்தோம், மருத்துவத் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.801 கோடியை ஒன்றிய அமைச்சர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: