அண்ணா வழியில வந்தவங்க நாங்க, அதனால தமிழ்நாடு என்பதை ஆதரிக்கிறோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: அதிமுகவினர் அண்ணா வழி வந்தவர்கள் என்பதால் தமிழ்நாடு என்ற பெயரையே ஆதரிக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டிற்கு என்று தனித்தன்மை உண்டு; தமிழ்நாடு என்றுதான் அழைக்கப்பட வேண்டுமென 1963லேயே குரல் கொடுத்தவர் அண்ணா; அவரது வழியில் வந்தவர்கள் நாங்கள் என்பதால் என்பதால் தமிழ்நாடு என்ற பெயரையே ஆதரிக்கிறோம். தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராக இருக்கும்.

அதற்கு பெயர்மாற்றம் மூலம் கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அண்ணா, கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலமாகவும், நாடாளுமன்றம் என்பதை லோக் சபா என்று மாற்றிதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று பதிலளித்தார். தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: