×

அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்..!!

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர்  ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்,  விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிருவாகம் குறித்து, இணை இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர்  ராஜகண்ணப்பன் , தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிருவாகம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார்கள்.

2022-2023ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை நடைமுறைபடுத்துவது குறித்தும், துறையின் திட்ட செயல்பாடுகள், கள்ளர் சீரமைப்பு பள்ளி/விடுதிகள் (ம) இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி /பள்ளி விடுதிகளின் நிர்வாகம், 11-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்த மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சார்ந்தவர்களுக்கு சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டங்கள், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,  வீடற்ற ஏழை/எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சார்ந்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும் தொடர்பாகவும்  இணை இயக்குநர், மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் தெரிவித்தார்.

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு  நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை நன்முறையில்  பராமரிப்பு செய்து மாணாக்கர்கள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்குமாறும் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணிபுரிய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தின் போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் அவர்கள், 2021-22 ஆம் ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் காசோலை வழங்கி சிறப்பித்தார்கள்.

மேற்படி ஆய்வு கூட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் திரு.துறைமுகம் காஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மாபினர் நலத்துறை ஆணையர் முனைவர். இரா. நந்தகோபால், இ.ஆ.ப.., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப.., தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister Rajakanappan ,Sirmarabinar Welfare Department ,Minister ,Rajakanappan , Minister Rajakannappan, Backward People, Study Group
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...