×

'தனி மனிதனின் சுயநலத்துக்காக கட்சி பலியாகிறது': அதிமுக தொண்டர்களே கட்சி முடிவெடுக்க எம்.ஜி.ஆர். விரும்பினார்..சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!!

டெல்லி: அதிமுகவில் கட்சி முடிவுகளை அடிப்படை தொண்டர்கள் மூலமாகவே எடுக்க எம்.ஜி. விரும்பினார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக நடைபெற்றது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து மேல்முறையீடு செய்திருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைக்கிறார். அப்போது,

தொண்டர்களே கட்சி முடிவெடுக்க எம்.ஜி.ஆர். விரும்பினார்: ஓபிஎஸ் தரப்பு

அதிமுகவில் கட்சி முடிவுகளை அடிப்படை தொண்டர்கள் மூலமாகவே எடுக்க எம்.ஜி. விரும்பினார் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே கட்சி விதிகளை எம்.ஜி.ஆர் அமைத்தார். சில முக்கிய விதிமுறைகளை எப்போதும் மாற்றியமைக்க கூடாது என எம்.ஜி.ஆர். விரும்பினார். கட்சி விதிகளை எல்லாம் அவசர கதியில் பழனிசாமி தரப்பினர் மாற்றியுள்ளனர். அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றியமைக்கப்பட்டு விட்டதாக பன்னீர்செல்வம் தரப்பு குற்றம்சாட்டியது. திடீரென ஒருவர் மைக் முன்பு வந்து தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி அதை பொதுக்குழு ஏற்றதாக அறிவிக்கிறார்கள். தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி அதை பொதுக்குழு ஏற்றதாக அறிவித்தது அதிகார துஷ்பிரயோகம் என வாதிடப்பட்டது.

தேர்தல் நடந்தால் நான்தான் வெல்வேன்:

அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தாலும் கூட நான்தான் வெற்றி பெற்று ஒற்றை தலைமையில் அமருவேன். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குதான் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.

தனி மனிதனின் சுயநலத்துக்காக கட்சி பலியாகிறது:

தனி மனிதனின் சுயநலத்துக்காகவும், பதவி வெற்றிக்காகவும் கட்சியை பலி கொடுக்கிறார்கள். அதிமுகவின் பொருளாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் மிக மூத்த தலைவர் என்று வழக்கறிஞர் வாதிட்டார். கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்டபோது முன்னின்று அதனை சமாளித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பன்னீருக்கு கட்சி தலைமை 3 முறை முதல்வர் பதவியை தந்தபோதும் விசுவாசத்துடன் நடந்து தலைமையின் நன்மதிப்பை பெற்றவர். அத்தகைய ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் தரப்பு வாதம் நிறைவு: ஜனவரி 10ல் மீண்டும் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பன்னீர்செல்வம் தரப்பு வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து  வழக்கு விசாரணையை ஜனவரி 10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழுவில் நடந்ததை பன்னீர்செல்வம் தரப்பு கடந்த 3 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.


Tags : GG R.R. ,OPS ,Supreme Court , AIADMK workers, M.G.R. , OPS side
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...