×

சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னையில் முதன்முறையாக 1000 அரங்குகளுடன் பிரமாண்ட புத்தக கண்காட்சி இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று முதல் தொடங்கி 22-ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 46-வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. புத்தகக் கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சியை இன்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில் கருணாநிதி பொற்கிழி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும்,  சிறந்த பதிப்பாளர்களுக்கும்  விருதுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

40-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் விடுமுறையை திட்டம்மிட்டு புத்தக் கண்காட்சி திறந்துவைக்கப்படவுள்ளது.

வழக்கமாக 200 முதல் 800 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் இந்த ஆண்டு மிக பிரமாடமாக அமைய வேண்டும் நோக்கில் 200 புதிய அரங்குகளுடன் மொத்தம் 1000 அரங்குகளாக அமைக்கப்பட்டு அவை திறந்துவைக்க திட்டமிட்டுள்ளப்பட்டுள்ளது. பல்வேறு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.


Tags : exhibition ,Chennai ,Chief Minister Municipality ,G.K. Stalin , 46th Book Fair in Chennai begins today: Chief Minister M.K. Stalin initiates
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!