×

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு: மாடுபிடி வீரர்கள் சோகம்..!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற தமிழ் நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் இன்று (6ம்தேதி) நடைபெற இருந்தது.

கடந்த 2ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்படிருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசு அனுமதி நேற்று மதியம் கிடைத்ததை தொடர்ந்து போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக காளைகள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் சுமார் 700 காளைகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்ப்டடது. மேலும் மாடுபிடி வீரர்கள் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

இவர்களுக்கான பரிசோதனை மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனைகள் மருத்துவ குழுவினர்களால் நடைபெற்று வந்தது. ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கண்காணித்து ஆய்வு செய்தனர். மேலும் வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறமும் தட்டி வைத்து அடைக்கும் வேலையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்ைத பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள், ஊர் மக்களிடம் பேசினார். இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நீதிமன்ற வழிகாட்டுதல் படி ஏற்பாடுகள் செய்த பின்னர் வேறு ஒரு தேதியில் அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் மாடுபிடி வீரர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர். இதனிடையே இன்று காலை தச்சங்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காளைகள் வராமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.


Tags : Jallikattu ,Thachankurichi , Today's Jallikattu postponement in Thachankurichi: Cowherds are very sad..!
× RELATED கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800...