×

தமிழகத்துக்கு புதிய இ‌எஸ்ஐ மருத்துவமனைகள், மருந்தகங்கள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிய இ‌எஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் ஐஏஎஸ், இஎஸ்ஐ  இயக்குனர் ராஜமூர்த்தி முன்னிலையில், முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக் கூட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் உட்புற வெளிப்புற பராமரிப்பு குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், மருத்துவமனைகளில் நவீன மருந்துகள் இருக்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், காப்பீட்டாளர்களிடம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் விரைவில் அமைக்கப்படும்’’ என்றார்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும்  இருந்து மண்டல நிர்வாக மருத்துவர்கள், அலுவலர்கள், மருத்துவ  கண்காணிப்பாளர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : New ESI Hospitals ,Tamil Nadu ,Minister C. CV Ganesan , New ESI Hospital, Dispensaries for Tamil Nadu, Minister CV Ganesan
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...