×

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் திட்டப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார். பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இலகுரக ஒட்டுநர் பயிற்சி பெற்ற 81 நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் அழகுக்கலை நிபுணர் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
இலகுரக ஒட்டுநர் பயிற்சி, அழகுக்கலை நிபுணர், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பயிற்சி,  ஜெனரல் டூட்டி அஸிஸ்டென்ட் போன்ற பயிற்சிகள் 361 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 183 நபர்களுக்கு கணிணி பயிற்சி, தையல் பயிற்சி, இரண்டு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி போன்ற 18  விதமான பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர தொண்டு நிறுவனங்களின் மூலம் 22 விதமான  பல்வேறு பயிற்சிகள் 1,324 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த நிதியாண்டில் இதுவரை 1.868 இளைஞர்கள் திறன் வளர்ப்பு பயிற்சியில் பயனடைந்துள்ளனர்.  இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Minister ,O.R. Moe Andarasan , Skill development training for youth, driving license, Minister Thamo Anparasan,
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...