×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25000 முதல்வர் வழங்கினார்

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். கலைஞர் அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியில் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு 2005ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ. 5 கோடியே 67 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ரூ.2,00,000 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags : Chief Minister ,Artist Foundation , Artist Foundation, Principal M.K.Stalin
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்