×

ஜன.7, 11, 27ம் தேதிகளில் காட்பாடி-ஜோலார்பேட்டை ரயில்கள் முழுமையாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக ஜன.7, 11, 27ம் தேதி ஆகிய நாட்கள் காட்பாடி-ஜோலார்பேட்டை ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் ஜனவரி மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய ரயில் பாதை பராமரிப்பு மற்றும் ரயில் தடங்கள் மேம்படுத்துதல் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - காட்பாடி (ரயில். எண் 06417, 06418) சிறப்பு விரைவு ரயில்கள் மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம், அரக்கோணம் - வேலூர் கன்டோன்மென்ட் (06736, 06735) சிறப்பு ரயில்கள்  ஜன. 7, 11, 27ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஜனவரி 11ம் தேதி சென்னை சென்ட்ரல் - சாய்நகர் சீரடி ரயில்(22601) 2 மணிநேரம் தாமதமாக நண்பகல் 12.20 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து  புறப்படும். அதேபோல, சென்னை சென்ட்ரல் - மங்களூர் அதிவிரைவு ரயில்(22637) 20 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.35மணிக்கு புறப்படும். சென்னை சென்ட்ரல் - மைசூர் அதிவிரைவு ரயில்(12609) 10 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.35மணிக்கு புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவை, மைசூர், லால்பாக் ரயில்கள் சென்னை போகாது
ஜன.24ம் தேதி கோவை - சென்னை  சென்ட்ரல் இண்டர்சிட்டி ரயில்(12680), மைசூர் - சென்னை சென்டரல் ரயில்  (12610) ஆகிய ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும், சென்னை  சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி ரயில்(12679) சென்னை சென்ட்ரல் முதல்  காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை  4.30 மணிக்கு புறப்படும், அதேபோல சென்னை சென்ட்ரல் - பெங்களூர் லால்பாக்  விரைவு ரயில்(12607) காட்பாடியிலிருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும்.

Tags : Gadpadi ,Railway , Gadpadi-Jolarpet trains, cancelled, Southern Railway
× RELATED காட்பாடி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்