அமெரிக்கா செல்ல விசா கட்டணங்கள் உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது. இதன்படி எச்.1பி விசாக்களுக்கான விண்ணப்ப கட்டணம் 460 டாலரில் இருந்து 780 டாலராக உயர்த்தப்படுகிறது. எல்.1 விசாவுக்கு 460 டாலரில் இருந்து 1385 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓ-1 விசா கட்டணம்,460 டாலரில் இருந்து ஆயிரத்து 55 டாலர்களாக உயர்த்தப்படுகிறது. கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கூற 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரலாம்.

Related Stories: