×

தாம்பரம் மாநகராட்சியில் காலதாமதம் இல்லாமல் பில் தொகை வழங்க வேண்டும்: ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில், ஒப்பந்ததாரர்களுக்கு காலதாமதம் இன்றி பில் தொகையை வழங்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கு முறையாக பில் தொகை வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடிப்பதாகவும், செய்த பணிகளுக்கு உரிய நேரத்தில் பில் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில், நேற்று மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மற்றும் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

பின்னர், இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சியில் பணி செய்த பல ஒப்பந்ததார்களுக்கு இன்னும் பில் வழங்கப்படவில்லை. அதனால், காலதாமதம் இன்றி பில் வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு தொகை 5 சதவீதத்தை திருப்பி வழங்க வேண்டும். மாநகராட்சியில் பதிவு செய்யாத சங்கத்தை அனுமதிக்கக்கூடாது. மாநகராட்சி அலுவலகம் முன் சங்கம் பெயர் பலகை வைக்க அனுமதிக்க வேண்டும். டெண்டரின்போது ஒப்பந்தப் புள்ளியில் கலந்துகொள்ளும்போது டேவணித் தொகை ஒரு சதவீதம் பில் தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது.

அந்த, தொகையை தணிக்கை முடிந்து வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. மாநகராட்சியில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அந்த தொகை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தாம்பரம் மாநகராட்சி சார்பில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் 31ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,’’ இவ்வாறு கூறினர்.

Tags : Tambaram Corporation ,Contractors Association , Tambaram Corporation to pay bills without delay: Contractors Association demands
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...