×

போராடி தோற்றது இந்தியா: அக்‌ஷர் அதிரடி வீண்

பூனா: இந்தியாவந்துள்ள இலங்கை அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்  வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றியை சுவைத்தது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இந்திய அணி நேற்று இரவு 2வது ஆட்டத்தில் இலங்கையை எதிர் கொண்டது. பூனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 206 ரன் குவித்தது. அதனையடுத்து ரன் 207 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 31 பந்தில் 65 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. கடைசி டி20 ஆட்டம் நாளை ராஜ்காட்டில் நடக்கும்.

Tags : India ,Akshar , India fought and lost: Akshar's action was futile
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!